66 வயது கோடீஸ்வரரை மணந்து கொண்ட 31 வயது அழகிய இளம்பெண்! விமர்சனத்துக்கு கொடுத்துள்ள பதிலடி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸை சேர்ந்த 31 வயதான இளம்பெண் 66 வயதான கோடீஸ்வரரை மணந்து கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

Pauleen Luna (31) என்ற அழகிய இளம்பெண் நடிகையாக உள்ளார். இவருக்கும் Vic Sotto (66) என்பவருக்கும் கடந்த 2016ல் திருமணம் நடைபெற்றது.

கோடீஸ்வரரான Vic Sottoன் சொத்து மதிப்பு $14 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது, Pauleen-ஐ விட Vicக்கு 34 வயது அதிகம் என்பதால் இந்த திருமணம் குறித்து முதலில் விமர்சனம் எழுந்தது.

ஆனால் விமர்சனங்களை உடைக்கும் வகையில் தம்பதி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து Pauleen கூறுகையில், கணவருடனான வயது வித்தியாசத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என இப்போதும் என்னிடம் கேட்கிறார்கள்.

இது பற்றி நான் என்றைக்கும் சிந்தித்ததில்லை, Vic எனக்கு மிகவும் மரியாதை கொடுப்பதோடு, பாதுகாப்பு உணர்வையும் தருவார்.

என்னை அவர் மிகவும் நேசிப்பதால் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. என்னை தன்னுடைய பாதியாக மதிக்கும் Vic என் முடிவுகளுக்கு மதிப்பு தருபவர்.

என்னிடம் குரலை உயர்த்தி கூட அவர் பேசமாட்டார் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்