பயன்படுத்தப்பட்ட 3 லட்சம் ஆணுறைகளை மறுசுழற்சி செய்து... சிக்கிய உரிமையாளர்: அதிரடியாக கைது செய்த பொலிசார்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வியட்நாமில் மறுசுழற்ச்சி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் மூன்று லட்சத்திற்கு மேலான ஆணுறைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

வியட்நாமின் Binh Duong மாகாணத்தில் இருக்கும் கிடங்கு ஒன்றில் கடந்த 19-ஆம் திகதி பொலிசார் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்,

அப்போது அங்கு சுமார் 360 கிலோ எடை கொண்ட, மறு சுழற்ச்சி செய்யப்பட்ட 324,000 ஆணுறைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

metro.co.uk

அதன் பின் அந்த கிடங்கின் உரிமையாளர் Pham Thi Thanh Ngo(33), சமீபத்தில் அடையாளம் தெரியாத நபர் இதை கொடுத்ததாகவும், அதை சுத்தம் செய்து, காய வைத்து அதன் பின் தேவையான அளவிற்கு வடிவமைத்து விற்பனை செய்து வந்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளன.

மாகாண சந்தையின் மேலாண்மை இயக்குனர் Tran Van Tung கூறுகையில், ஆணுறைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அபாயகரமான மருத்துவ கழிவுகள் என்பதால் உடனடியாக அக்கற்றப்படும் என்று கூறியுள்ளார்.

metro.co.uk

மேலும், பறிமுதல் செய்யப்படுவதற்கு எத்தனை ஆணுறைகள் எங்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை, இப்படி பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தினாலும், பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இந்த கிடங்கின் உரிமையாளரை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்