சுருண்டு விழும் வரை கசையடி... தண்டனைக்கு இன்னொரு நாள் குறித்த அதிகாரிகள்: அவர் செய்த குற்றம்?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபருக்கு பொதுமக்கள் மத்தியில் 169 கசையடிகள் தண்டனையாக வழங்க ஷரியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வியாழனன்று தண்டனை நிறைவேற்றத் தொடங்கிய நிலையில் 52 கசையடிகளில் அந்த நபர் சுருண்டு விழுந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தொடர்ந்து அவர் தண்டனை பெற முடியாத நிலையில் இருப்பதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார்.

ஆனால், அவரது உடல் நலம் தேறிய பின்னர் எஞ்சியுள்ள 117 கசையடியும் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

ரோனி என மட்டும் பெயர் தெரிவிக்கப்பட்டுள்ள அந்த நபர் ஏற்கெனவே 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதால், அவருக்கு வழங்கப்பட்டிருந்த 175 கசையடியில் 6 எண்ணிக்கையை நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.

இந்த நிலையில் 52 முறை கசையடி தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர், அவருக்கு உயிர் அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டதால் அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குணமடைந்த பின்னர் இன்னொரு நாள் தண்டனைக்காக அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்