சீனாவில் ரகசியமாக தடுப்பூசி மருந்து பரிசோதனை... இலக்காகும் அப்பாவி பொதுமக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி ரகசியமாக தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்வதாக சீனா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிரது.

இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா, பிரித்தானியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.

சீனாவில், 11 வகையான தடுப்பூசிகள் பல்வேறு கட்ட பரிசோதனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் மூன்று தடுப்பூசிகள் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் உள்ளன. பல நாடுகளில் தானாக முன்வந்து மக்கள் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், சீனாவில் குறிப்பிட்ட பொதுமக்களை தெரிவு செய்து அவர்களை கட்டாயப்படுத்தி, ரகசியமாக தடுப்பூசி மருந்துகள் பரிசோதனை நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அரசு அதிகாரிகள், அரசு நிறுவன ஊழியர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் ஆகியோர், இந்தப் பரிசோதனைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம், பரிசோதனை நடத்தப்படுவது குறித்த தகவல்களை வெளியே தெரிவிக்கக் கூடாது என ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்தும் பெறப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால், குறித்த தகவல்களை முற்றாக சீனா மறுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு ஜூலை மாதத்தில் வழங்கிய ஒப்புதலின்படியே, பரிசோதனைகள் நடக்கின்றன.

எந்த விதிமீறலும் இல்லை என சீன தேசிய சுகாதார கமிஷனின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில் கட்டாயப்படுத்தி ரகசியமாக அதுவும் வெளியே பேசக்கூடாது என்று மிரட்டப்பட்டு தடுப்பூசி வழங்கப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்