இரு நாடுகளுக்கு இடையே வெடித்த மோதல்... கொத்தாக பலியான பலர்: 100க்கும் மேற்பட்டோர் காயம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
721Shares

ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் படைகளுக்கு இடையே நடந்த சண்டையில் 23 பேர் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனிய மற்றும் அஜர்பைஜான் படைகளுக்கு இடையே சமீபகாலமாக மோதல்கள் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக அஜர்பைஜான் நாட்டுக்கு சொந்தமான விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த நிலையில், நாகோர்னோ-கராபாக் பகுதிக்கு அஜர்பைஜான் படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஆர்மீனிய படைகள் அஜர்பைஜான் ராணுவ மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதில் 23 பேர் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம அடைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

1994-ல் போர் நிறுத்த உடன்படிக்கை ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும், அஜர்பைஜானும் ஆர்மீனியாவும் நாகோர்னோ-கராபாக் மற்றும் தனி அஜெரி-ஆர்மீனிய எல்லைப்புறங்களில் ஒருவருக்கொருவர் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்