வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்புக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மர்மம்! இது தான் காரணமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
947Shares

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்டது, உலக நாடுகளுடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் வித்தியாசமான அதிபராக வலம் வருபவர் கிம் ஜாங் உன். இவர் கொடுக்கும் உத்தரவுகளும், அளிக்கும் தீர்ப்புகளும் மிகவும் கொடூரமானவையாகவும், வினோதமானவையாகவும் இருக்கும்.

அந்தளவிற்கு தன்னை எதிர்ப்பவர்களுக்கு அவர் வழங்கும் தண்டனை கொடூரமாக இருக்கும். அவரது மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில், தன்னை எதிர்ப்பவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காகவே, பிரான்ஹா வகை மீன்களை அவர் வளர்த்து வருவதாக கூறப்படுவதுண்டு.

(Picture: Getty Images)

பார்க்க மிக சிறிதாக இருக்கும் பிரான்ஹா மீன்களிடம் ஒரு மனிதன் அகப்பட்டால் நொடிகளில் அவனை கடித்து குதறி, எலும்பு கூட்டை தனியாக எடுத்து விடும். அந்தளவிற்கு பலம் வாய்ந்த மீன்கள் இருக்கும் நீச்சல் குளத்தில் தன்னை எதிர்ப்பவர்களை போட்டுவிடுவார்.

இப்படி கொடுங்கோலனாக திகழும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் மன்னிப்பு கேட்டது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியாவில், சில நாட்களுக்கு முன்பாக, சந்தேகத்திற்கிடமான வகையில் வட கொரியாவின் எல்லையில் நுழைந்த தென்கொரியாவைச் சேர்ந்த நபரை, கடலில் வைத்தே விசாரணை நடத்திய பின்னர், வட கொரிய வீரர்கள் அவரை அந்த இடத்திலே சுட்டுக் கொன்றனர். அதன் பின், அவரது உடலையும் எரித்து விட்டனர்.

(Picture: EPA)

அதற்கு தென் கொரியா கண்டனம் வெளியிட்ட பின்னர், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு தெரிவித்ததாகத் தென் கொரியா அறிக்கை வெளியிட்டது.

வட கொரிய அதிகாரி கிம் ஜாங் உன், இந்த எதிர்பாராத சம்பவத்திற்காக, தென் கொரிய மக்களிடமும், தென் கொரிய அதிபர் Moon Jae-in இடமும் வருத்தம் தெரிவித்தார் என என்று தென் கொரிய அதிபர் மூன் ஆலோசகர் சு ஹூன் கூறினார்.

எப்போதும், யாரிடமும் அந்தளவிற்கு இறங்கி போகாமல் பிடிவாத குணம் கொண்டவர் என்று கூறப்படும் வடகொரியா அதிபரின், இந்த மன்னிப்பு உண்மையிலேயெ உலக நாடுகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பின்னால், இரு காரணங்கள் இருப்பதாக, உலக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

வட கொரியாவில், தற்போது பொருளாதார நிலை மோசமாக உள்ளதோடு, உணவு தட்டுபாடு நிலவுகிறது. இதனால், இப்போது எதற்கு தென் கொரொயாவை வம்புக்கு இழுக்க வேண்டும் என வட கொரிய அதிபர் நினைக்கிறார்.

அதுமட்டுமின்றி, இரண்டாவது, தனது நெருகிய உற்ற தோழரான சீனா மீது, உலக நாடுகளே இந்த கொரோனா காரணமாக கடும் கோபத்தில் உள்ளன. இதனால் உலக அளவில் சீனாவில் நிலை பலவீனமடைந்து வருவதால், சர்வதேச அளவில், தான் ஒரு ஜனநாயக நாடு என்று எடுத்து காட்ட விரும்புவதாக நம்பப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்