புண்ணிய ஸ்தலத்திற்கு சென்றவர்கள் பேருந்துடன் வெடித்து சிதறிய கோரம்: பெண்கள்,குழந்தைகள் என 14 பேர் படுகொலை

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

டைகுண்டி மாகாணத்தில் மினி பஸ்சில் சென்றுக்கொண்டிருந்து போது சாலையோரத்தில் பதுக்கி வைத்திருந்து வெடிபொருளை வெடிக்கச் செய்ததில் ஏழு பெண்கள், ஐந்து குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண்கள் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரெக் அரியன் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில் மூன்று குழந்தைகள் காயமடைந்தனர், இந்த குண்டுவெடிப்புக்கு தலிபான்கள் மீது உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மினி பஸ்சில் புண்ணிய ஸ்தலத்திற்கு சென்று கொண்டிருந்த போது வெடிகுண்டு தாக்கியது என டைகுண்டியின் ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் நஸ்ருல்லா கோரி கூறினார்.

குண்டுவெடிப்புக்கு எந்தவொ ரு குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையின்படி, 2020 முதல் பாதியில் ஆப்கானிஸ்தானில் 800 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்