சீனாவில் இருந்து வரும் மற்றொரு வைரஸ்! இது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலைஇல், சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி மற்றொரு வைரஸ் திரும்பியுள்ளது, ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது.

சீனாவின் வூஹானில் பரவிய கொரோனா வைரஸ், உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது.

இந்நிலையில், சீனாவில் இருந்து மற்றொரு வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இது இந்தியாவில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர்.

சீனாவில் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ள கேட் கியூ வைரஸ் (சி.க்யூ.வி), இந்தியாவில் காய்ச்சல், மூளைக்காய்ச்சல் மற்றும் பீடியாட்ரிக்ட் என்செபாலிடிஸ் போன்ற நோய்களையும் ஏற்படுத்தக்கூடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக இந்தியாவின் Livemint கூறியுள்ளது.

CQV என்பது ஆர்த்ரோபாட் மூலம் பரவும் வைரஸ்கள் அல்லது ஆர்போவைரஸ்களாகும். சீனாவும், வியட்நாமும் கியூலெக்ஸ் கொசுக்கள் மற்றும் பன்றிகளுக்குள் சி.க்யூ.வி இருப்பதாக தெரிவித்துள்ளன.

ஐ.சி.எம்.ஆர் ஆய்வின்படி, இந்திய கொசுக்கள், அதாவது ஈகிப்டி, சி.எக்ஸ். குயின்கெஃபாசியஸ், மற்றும் சி.எக்ஸ். ட்ரிடேனியர்ஹைஞ்சஸ், CQV க்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியவை என்று கண்டறியப்பட்டுள்ளது. CQV இன் முதன்மை பாலூட்டி ஸ்வைன்கள் தான்.

புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் விஞ்ஞானிகள் இந்தியா முழுவதும் சேகரிக்கப்பட்ட 883 மனித சீரம் மாதிரிகளில் இரண்டில் CQV க்கான ஆன்டிபாடிகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இதன் பொருள் என்னவென்றால், அந்த இரண்டு நபர்களும் ஒரு கட்டத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள் என்பது ஆகும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்