போதையில் வீட்டுக்கு வந்த இளம்பெண்... கபாப் கடைக்காரரான தந்தை செய்த பயங்கர செயல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

போதையில் வீடு திரும்பிய மகள் தாயுடன் வாக்குவாதம் செய்ததால், கோபமடைந்த தந்தை அவளை துண்டு துண்டாக வெட்டி வீசினார்.

கபாப் கடை வைத்திருக்கும் Hasan Usluவின் மகள் Didem Uslu (32) ஒரு நடன மங்கை. ஒரு நாள் வீட்டுக்கு திரும்பும்போது குடித்துவிட்டு போதையில் வந்திருக்கிறார் Didem. ஏன் குடித்துவிட்டு வந்தாய் என்று கேட்ட தாயிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார் Didem.

கோபமடைந்த Didemஇன் தந்தை Hasan, மகளைக் கழுத்தை நெறித்துக்கொன்றுவிட்டு, அவரை துண்டு துண்டாக வெட்டி ப்ரீசருக்குள் அடைத்துள்ளார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் பாகங்களை ஆங்காங்கே கொண்டு சென்று வீசியிருக்கிறார்.

விறகு பொறுக்கச் சென்ற ஒருவர், ஒரு கை காகிதத்தில் சுற்றப்பட்டு கிடப்பதைக் கண்டு பொலிசில் தகவலளித்திருக்கிறார்.

அந்த கையிலுள்ள ரேகைகளை வைத்து, அது Didemஉடையது என்பதைக் கண்டறிந்த பொலிசார் Hasanஐக் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், தன் மகள் செய்தது தவறு என்று வாக்குவாதம் செய்த Hasan, அவள் தாய் தந்தையை மதிக்காததால்தான் அவளுக்கு அந்த நிலை என்று கூறியுள்ளார். நீதிமன்றம் Hasanக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்