இரு நாடுகளுக்கு இடையே தொடரும் பயங்கர மோதல்! ஈரானில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

தங்கள் இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆஜர்பைஜான் ஹெலிகாப்டர் ஈரானில் விழுந்து நொறுங்கியதாக நாகோர்னோ-கராபாக் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைகுரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியதிற்காக ஆர்மீனிய-ஆஜர்பைஜான் ஞாயிற்றிக்கிழமை முதல் பயங்கர மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நாகோர்னோ-கராபாக் பாதுகாப்பு அமைச்சகம் பேஸ்புக்கில், தனது படைகள் அஜர்பைஜான் இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாகவும், அது ஈரானின் வராசட்டும்பிற்கு அருகே விழுந்து நொறுங்கியதாக தெரிவித்தது..

ஈரானிய எல்லைக்கு அருகே சண்டை நடைபெற்று வருவதால் இந்த சம்பவம் வேண்டுமென்றே செய்யவில்லை என்று நாகோர்னோ-கராபாக் பாதுகாப்பு அமைச்சகம் ஈரானுக்கு உறுதியளித்துள்ளது.

ஆனால், தனது ஹெலிகாப்டர்களில் ஒன்று எதிரி படைகளால் வீழ்த்தப்பட்ட பின்னர் ஈரானிய பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது என்ற கூற்றை அஜர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

ஆர்மீனிய ஊடகங்களில் பரப்பப்பட்ட கூற்றை பொய் என அஜர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை காலை மீண்டும் மோதல்கள் தொடங்கிய பின்னர் அஜர்பைஜானின் 360 இராணுவ வீரர்கள், மூன்று ஹெலிகாப்டர்கள், 15 பாதுகாப்பு வாகனங்கள், ஒரு ராக்கெட் ஏவுகணை மற்றும் ஆறு யுஏவி விமானங்களை அழித்துவிட்டதாக கூறியது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்