எனக்கு விஷம் வைத்தவர் அவர்தான்: அலெக்ஸி நவால்னி திட்டவட்டம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

எனக்கு விஷம் வைத்ததன் பின்னணியில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தான் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் அலெக்ஸி நவால்னி.

இதுகுறித்து ஜேர்மனி நாளேடு ஒன்றுக்கு முதல்முதலாக பேட்டி அளித்திருக்கிறார் ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி.

இது புடினின் திட்டம்தான். எனக்கு விஷம் அளிக்கப்பட்டதன் பின்னணியில் புடின் தான் இருக்கிறார்.

ஆனால் இதனை புடின் எவ்வாறு செய்தார் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை என அந்த நாளேட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புடினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமசித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய ஜனாதிபதி தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

REUTERS

ஆனால், புடின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்து.

இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புடின் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜேர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜேர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது.

அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜேர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது.

மட்டுமின்றி, அமெரிக்க உளவு அமைப்புடன் அலெக்ஸி நவால்னி தொடர்பு வைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்