விடியற்காலையில் நகரத்தையே அதிர வைத்த ஏவுகணை தாக்குதல்: தரைமட்டமான வீடுகள்.. தூக்கத்திலே கொல்லப்பட்ட மக்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

அஜர்பைஜானின் இரண்டாவது பெரிய நகரமான கஞ்சாவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 13 கொல்லப்பட்டனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆர்மீனிய இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக அஜர்பைஜான் குற்றம்சாட்டியுள்ளது. அதே சமயம் அஜர்பைஜான் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தியதாக ஆர்மீனிய குற்றம்சாட்டியுள்ளது.

சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனி-அஜர்பைஜான் இடையேயான பயங்கர மோதல் இடம்பெற்றது.

ரஷ்யாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு பிறகும் இரு நாடுகளும் தொடர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சனிக்கிழமையன்று விடியகாலையில் அஜர்பைஜானின் இரண்டாவது நகரமான கஞ்சாவில் ஆர்மீனிய நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 20 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

தூக்கத்திலிருந்து 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Mingechavir நகரத்தை குறிவைத்தும் ஆர்மீனிய ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் அஜர்பைஜான் வான் பாதுகாப்பு அமைப்பு அதை வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜர்பைஜான் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஆர்மீனிய, நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் அஜர்பைஜான் தொடர்ந்து ஷெல் தாக்குதலை நடத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்