சீன கொரோனா தடுப்பூசி குறித்து வெளியாகியுள்ள நம்பிக்கையூட்டும் தகவல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சீனாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி சோதனை முயற்சியில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் உடலில் ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. சீனாவில் 640 பேர் மீது கொரோனா தடுப்பூசி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக, ஒருவருக்கு எவ்வளவு தடுப்பு மருந்து தேவைப்படும் என்பதற்கான சோதனைகள் நடத்தப்பட்டன.

அதன்படி, 18 வயது முதல் 80 வயது வரையுள்ள 192பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது கட்டமாக, எவ்வளவு காலம் இந்த தடுப்பூசி போடவேண்டும் என்பதைக் கண்டறிவதற்காக 18 வயது முதல் 59 வயது வரையுள்ள 448 பேருக்கு முறையே 14, 21 மற்றும் 28 நாட்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அந்த 28 நாட்களில் எவ்வித மோசமான விளைவுகளும் யாருக்கும் ஏற்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அதிக பட்சமாக ஊசி போடும் இடத்தில் வலி இருந்துள்ளது, சிலருக்கு காய்ச்சல் இருந்துள்ளது அவ்வளவுதான்.

இந்நிலையில், 21 மற்றும் 28 நாட்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உடலில் ஆன்டிபாடிகள் உருவாவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

ஆனால், அவற்றின் அளவு குறைவாகவே உள்ளது, எனவே, பூஸ்டர் எனப்படும், மீண்டும் மீண்டும் சில முறை தடுப்பூசி போடுவதன் மூலம் போதுமான ஆன்டிபாடிகள் உருவாகலாம் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இது சோதனையின் மூன்றாவது கட்டத்திற்கு செல்வதற்கு ஒரு பயனுள்ள தகவலை அளித்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இளம் வயது முதல் நடுத்தர வயதுள்ளவர்கள் உடலில் உருவாவதை விட 60 மற்றும் அதற்கு மேல் வயதுள்ளவர்கள் உடலில் மெதுவாகவே ஆன்டிபாடிகள் உருவாகின்றன. அத்துடன் ஆன்டிபாடிகளின் எண்ணிக்கையும் வயது ஏற ஏற குறைவாகவே உள்ளது.

இந்த அளவுக்கு இந்த தடுப்பூசி சோதனை வெற்றிபெற்றுள்ளது என்றாலும், பாதுகாப்பாக உள்ளது என்றாலும், சிறுவர்களுக்கு அது எந்த அளவு பயன்படும் என்பது குறித்த சோதனைகள் இனிமேல்தான் செய்யப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்