கொரோனா மனித தோலில் இத்தனை மணிநேரம் உயிர்ப்புடன் இருக்குமாம்: ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் மனித தோலில் 9 மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் காரணமாக கொரோனாவை எதிர்த்து போராட அடிக்கடி கை கழுவ வேண்டியதன் அவசியத்தை ஆராய்ச்சியாளர்கள் சுட்டுக் காட்டியுள்ளனர்.

காய்ச்சலை ஏற்படுத்தும் நோய்க்கிருமி மனித தோலில் சுமார் 1.8 மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும்.

ஆனால், கொரோனா வைரஸ் மனித தோலில் ஒன்பது மணிநேர உயிர்ப்புடன் இருக்கும். இதனால் நோய்த்தொற்று பரவும் அபயாம் அதிகரிக்கக்கூடும்.

கொரோனாவால் இறந்து ஒரு நாள் கழித்து பிரேத பரிசோதனை மாதிரிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தோலை ஆராய்ச்சி குழு பரிசோதித்ததில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

சானிடிசர்களில் பயன்படுத்தப்படும் எத்தனால் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் மற்றும் காய்ச்சல் வைரஸ் இரண்டும் 15 விநாடிகளுக்குள் அழிக்கப்படுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்