புலியுடன் சாலையில் வாக்கிங் சென்ற சிறுமி! அதிர்ந்து போன மக்கள்... வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

மெக்ஸிகோவில் சிறுமி ஒருவர் தனது புலிக்குட்டியை சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்று அதிரவைத்த வீடியோ வெளியாகியுள்ளது.

மெக்ஸிகோவில் குவாசேவ் என்ற இடம் உள்ளது, இந்த பகுதியைசேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டில் வங்கப்புலி குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் அவர் பணி செய்து கொண்டிருந்தார்.

இதையடுத்து அவரது மகள், நாயை வாக்கிங் அழைத்துச் செல்வது போன்று தாங்கள் வளர்க்கும் புலிக்குட்டியையும் வாங்கிங் கூட்டிச் சென்றுள்ளார்.

மக்கள் நடமாடும் சாலையில் புலியை வாக்கிங் அழைத்து செல்வதை பார்த்த பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்