கடுமையான கட்டுப்பாடுகள்... முழு ஊரடங்கிற்கு திரும்பும் அயர்லாந்து

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர புதன்கிழமை முதல் 6 வார காலத்திற்கு கடுமையான விதிகளுடன் கூடிய ஊரடங்கு நடவடிக்கையை அயர்லாந்து நிர்வாகம் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

புதன்கிழமை நள்ளிரவு முதல் அயர்லாந்து குடியரசானது ஐந்தாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படும்.

அதாவது, கடுமையான கட்டுப்பாடுகளுடன் 6 வார காலம் ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவர அயர்லாந்து அரசு முடிவுக்கு வந்துள்ளது.

இதனால், அனைத்து அத்தியாவசியமற்ற கடைகள், முடிதிருத்தும், சிகையலங்கார கடைகள் உள்ளிட்டவைகள் டிசம்பர் 1 வரை மூடப்படும்.

உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்,

மேலும் பொதுமக்கள் முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கூறப்படுவார்கள்.

புதிய விதிகளின் கீழ், மக்கள் தங்கள் வீட்டிலிருந்து 5 கி.மீ (3 மைல்) க்குள் மட்டுமே உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அனுமதிக்கப்பட்ட திருமண விருந்தினர்களின் எண்ணிக்கை ஆண்டு இறுதி வரை 25 ஆகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மீண்டும் ஒரு நாடு தழுவிய ஊரடங்கை திணிப்பது என்பது யதார்த்தமான தெரிவு அல்ல என குறிப்பிட்ட பிரதமர் மைக்கேல் மார்ட்டின்,

ஆனால், பெருகும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர வேறு வழியில்லை என திங்கள்கிழமை இரவு ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆறு வாரங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒரு அர்த்தமுள்ள வகையில் கொண்டாட நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போதைய இந்த நெருக்கடியில் இருந்து கூடிய விரைவில் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் நிதி உதவி வழங்குவதாக பிரதமர் மார்ட்டின் உறுதி அளித்தார்,

அத்துடன், மனநல சுகாதார சேவைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்