வெட்கப்படுகிறேன்... குடும்பத்தையும் இழந்து விட்டேன்: வெளிநாட்டில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு ஏற்பட்ட கதி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
305Shares

சிங்கப்பூரில் 15 வயது பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

செல்லம் ராஜேஷ் கண்ணன் என்ற 26 வயது இந்தியர் கடந்த 3 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.

காதல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. இவரது குடும்பம் இந்தியாவில் வசித்துவருகிறது.

கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் 15 வயது பெண் ஒருவரிடம் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதன்முறையாக இருவரும் சந்தித்தபோது அந்த பெண் ஒரு பாக்கெட் சிகரெட்டை பரிசாக கொடுத்திருக்கிறார்.

இரண்டாவதுமுறை அந்த பெண்ணின் ஒப்புதலுடன் கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாடிப்படியில் வைத்து அந்தப் பெண்ணை முத்தம் கொடுக்கும்படி வற்புறுத்தி இருக்கிறார். மேலும் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில், செல்வம் ராஜேஷ் கண்னன் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

விசாரணையில் குற்றத்தை ஒத்துக்கொண்ட செல்லம், தான் இவ்வாறு நடந்துகொண்டதற்காக வெட்கப்படுவதற்காகவும், சிங்கப்பூரில் வேலைக்குச் சேர்ந்த 3 ஆண்டுகளில் தான் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

மேலும் இதனால் தனது வேலையை இழந்துவிட்டதாகவும், தனது குடும்பத்தையும் இழந்துவிட்டதாகவும் கண்கலங்கியுள்ளார்.

அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதற்காகவும், பாலியல் தொல்லை கொடுத்ததற்காகவும் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 100,00 அமெரிக்க டொலர் வரை அபராதமாக விதிக்கப்படலாம் அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஷான் ஹோ, குறித்த நபருக்கு 7 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிட்த்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்