வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்த தமிழர்! உள்ளூரில் வசித்த தாய் வீட்டை சிசிடிவி காட்சி மூலம் பார்த்த போது ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
33045Shares

சென்னையில் பூட்டியிருந்த வீட்டுக்குள் திருடன் புகுந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து சிசிடிவி கமெரா மூலம் அதை பார்த்த உரிமையாளர் திருடனை பொலிசில் சிக்க வைத்துள்ளார்.

போரூரில் தனியாக வசித்து வருபவர் சண்முக சுந்தரவள்ளி (67). இவரது மகன் அருள்முருகன், அயர்லாந்தில் குடும்பத்துடன் வசித்து வசிக்கிறார்.

இந்நிலையில், மூதாட்டி நேற்று அண்ணா நகரில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

அருள்முருகன், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு தாய் என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்பதற்காக வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை தனது செல்போனில் பார்த்த போது வீட்டிற்குள் வேறு ஆள் நடமாட்டம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் அளிக்க, அங்கு விரைந்த காவல்துறையினர் லேப்டாப்புடன் சுவர் ஏறி வெளியே குதித்த செங்கல்பட்டைச் சேர்ந்த சைக்கோ முரளி என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், சில தினங்களுக்கு முன், கூடுவாஞ்சேரியில் வாசலில் கோலம் போடாத வீடுகளைத் தேடிப்பிடித்து‌, உள்ளே நுழைந்து கொள்ளையடித்து, காவல்துறையிடம் பிடிபட்டது தெரியவந்தது. மேலும், இதுவரை கொள்ளையடித்த 4 இடங்களிலும் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டதாகவும் கொள்ளை அடித்து நான் ஒன்றும் அனுபவிக்கவில்லை எனவும் அதற்குள்ளேயே பொலிசில் சிக்கிக் கொள்கிறேன் எனவும் சைக்கோ முரளி பொலிசில் புலம்பியுள்ளார்.

You May Like This Below Video

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்