தென் கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐவர் மரணம்: அச்சத்தில் மக்கள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
550Shares

தென் கொரியாவில் ப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதால், மக்களுக்கு தடுப்பூசியைக் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

குளிர்காலம் நெருங்குவதாலும், கொரோனாவும் பரவுவதாலும் தென் கொரியாவில் நாடு முழுவதும் ப்ளூவுக்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, சில வாரங்களுக்குமுன் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்படவேண்டிய சுமார் 5 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் அறை வெப்பநிலையிலேயே வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, மூன்று வாரங்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தடுப்பூசி போட துவங்கியுள்ள நிலையில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதால், மக்களுக்கு தடுப்பூசி குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 17 வயது இளைஞன் ஒருவனும் 70 வயது முதியவர் ஒருவரும் அடக்கம். அதிகாரிகள், இந்த உயிரிழப்புகளுக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினாலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களது மரணம் தொடர்பாக விசாரணை ஒன்றும் துவக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்