வெளிநாட்டில் மனைவியுடன் சிக்கித் தவித்த தமிழருக்கு கிடைத்த உதவி! நெகிழ்ச்சி சம்பவம்: தூதரகம் வெளியிட்ட புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1608Shares

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே பல்வேறு பிரச்சனைகள் காரணமாக சிக்கித் தவித்து வந்த வயதான தம்பதியினர் இறுதி சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன்(67) ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் பொது மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருடன் மனைவி ராதிகா(62)-வும் தங்கி வந்துள்ளார். இந்த தம்பதி கடந்த முப்பது ஆண்டுகளாக மகிழ்ச்சியான மற்றும் வசதியான, சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Credit: India in Dubai

இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்ரீனிவாசன் வேலைபார்த்து வந்த கம்பெனி திவாலானதால், மூடப்பட்டது. அதன் காரணமாக அவர் வேலையை இழந்ததால், இந்த தம்பதியின் தலைவிதி அப்படியே மாறியுள்ளது.

இதனால் அவர்களுக்கு பல நிதி நெருக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பல ஆண்டுகளாக அவர்கள் தீர்க்க முடியாத வாடகை பிரச்சனை இருந்து வந்துள்ளது.

வேலையை இழந்த பின்னரும் அவர்கள் அங்கே தங்கி வந்துள்ளனர். இந்த பிரச்சனை காரணமாக அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை, பயணத்தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, 2016-ஆம் ஆண்டு முதல், அவர்கள் விசாக்கள் இல்லாமல் தங்கியிருந்தனர், மேலும் ஸ்ரீனிவாசனுக்கு இதயம் தொடர்பான நோய் உருவாகியுள்ளது.

அதன் பின் இவர்களின் நிலையைக் கண்டு, துபாயில் உள்ள தமிழ் பெண்கள் சங்கத்தின் (டி.எல்.ஏ) தலைவர் மீனகுமாரி பத்மநாதன், வயதான தம்பதியினர் பல வருட துயரங்களைத் தொடர்ந்து கடுமையான நெருக்கடியில் காணப்பட்ட பின்னர் அவர்களுக்கு சமூக ஆதரவை ஏற்பாடு செய்ய உதவ தூதரகத்தால் தொடர்பு கொண்டுள்ளார்.

Credit: India in Dubai

கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்கள் தொடர்பான வழக்கு என்னிட வந்த போது, அவர்கள் பரிதாபகரமான நிலையில் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் ஒரு உணவை, நாள் ஒன்றிற்கு இரண்டு முறை பகிர்ந்து சாப்பிட்டு வந்தனர். அவர்கள் ஏற்கனவே நிறுவனத்தின் தங்குமிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர், அதற்காக அவர்கள் வாடகை வழக்கை எதிர்கொண்டனர்.

கராமாவில் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகளை ஏற்பாடு செய்ய சங்கத்தின் உறுப்பினர்கள் தம்பதியினரை ஆதரித்ததாகவும், கராமாவில் உள்ள ஸ்ரீ ஐஸ்வரியா சைவ உணவகம், அவர்களுக்கு இலவச உணவை வழங்கியதாகவும் அவர் கூறினார்.

மேலும், துபாய் கம்ப்யூட்டர் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் உமா சங்கரி கிருஷ்ணமூர்த்தி, வாடகை கொடுக்க வேண்டிய ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, வாடகை நிலுவைத் தொகையை உள்ளூர் மதிப்பு 190,000 திவானாக இருந்ததை, 50,000 திவானாக குறைக்க உதவியது.

அதன் பின், இந்த தொகையை கட்டுவதற்கு சமூக உறுப்பினர்களும் மற்றொரு தொழிலதிபர் சித்தார்த் பாலச்சந்திரனும் கொடுத்து உதவினர்.

சமூகத் தொண்டர்களான செந்தில் பிரபாகரன் மற்றும் சுப்பிரமணிய கணபதி ஆகியோர் அவர்கள் செல்வதற்கான அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டனர். இந்திய தூதரகம் அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு டிக்கெட் வழங்கியிருந்தாலும் லயன்ஸ் கிளப் அவர்களின் டிக்கெட்டுகளுக்கு நிதியுதவி அளித்ததாக மீனா குமாரி பத்மநாதன் கூறியுள்ளார்.

இந்திய தூதரகமும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பல்வேறு சட்ட சிக்கல்களால் துபாயில் சிக்கித் தவிக்கும் ஒரு வயதான தம்பதியர் திருமதி திரு சீனிவாசன், தூதரக உதவியுடன் நேற்று இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

BUIMERC-ன் சித்தார்த்த பாலச்சந்திரன் மற்றும் தமிழ் பெண்கள் சங்கத்தினருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்