சவுதி இளவரசர் மீது தைரியமாக வழக்கு தொடுத்துள்ள இளம் பெண்! கொலைக்கான மர்மம் நீங்குமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
466Shares

துருக்கியில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொலை செய்ய உத்தரவிட்டதாக, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு 59 வயது மதிக்கத்தக்க ஜமால் கஷோக்ஜி தனது தாய் நாடான சவுதியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்.

இவர் சவுதி அரச குடும்பத்தின் தீவிர விமர்சகர் என்று கூறப்பட்டு வந்தது.

துருக்கியில் வாழும் அந்நாட்டு பிரஜையான ஹாடீஜா ஜென்கிஸை திருமணம் செய்ய முடிவு செய்த அவர், முதல் திருமணத்தின் மணமுறிவுக்கான ஆவணங்களைப் பெற 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு சென்றிருந்தார்.

நீண்ட நேரமாக அவர் வெளியில் வராத காரணத்தினால், தூதரகத்துக்கு வெளியே காத்திருந்த அவரது காதலி ஹாடீஜா ஜெங்கிஸ் துருக்கி அரசின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றார்.

இதைத்தொடர்ந்து துருக்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தூதரகத்துக்கு உள்ளே பதிவான ரகசிய உரையாடல்களை வைத்து கஷோக்ஜி மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது.

ஆனால், கஷோக்ஜி மரணம், திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல என்று சவுதி அரசு கூறியது.

இந்நிலையில், ஹாடீஜா ஜெங்கிஸ் மற்றும் கஷோக்ஜி நிறுவிய டெமோக்ரசி பார் த அரப் வோர்ல்டு நவ் எனும் அமைப்பு சார்பில் வாஷிங்டனில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் நேற்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அதில், துருக்கி நாட்டவரான ஹாடீஜா தமக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொருளாதார ரீதியாகவும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்

கஷோக்ஜி கொலையால் தங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டெமோக்ரசி பார் த அரப் வோர்ல்டு நவ் தெரிவித்துள்ளது.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்