சீனாவின் கொரோனா தடுப்பூசியை நாங்க வாங்கமாட்டோம்! திட்டவட்டமாக அறிவித்த நாடு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனா கண்டுபிடிக்கும் கொரோனா தடுப்பூசியை நாங்கள் வாங்கமாடோம் என்று பிரேதில் அதிபர் தெரிவித்துள்ளார்.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தொற்று பரவல் தீவிரமாகி வருவதால், இதற்கு தடுப்பூசி தான் நிரந்தர தீர்வு என்று ஆய்வாளர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

அதற்கு ஏற்றவகையில், உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஒரு சில நாடுகளில் கொரோனாவிற்கான தடுப்பூசி இறுதிகட்டத்தில் உள்ளது, விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என உலக நாடுகள் எதிர்பார்த்து உள்ளன.

இந்த வைரசை உலக நாடுகளுக்கு அடையாளம் காட்டிய சீனாவும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

சீனாவின் சினோவேக் என்ற தடுப்பூசியும் இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்நிலையில், சீனாவின் கொரோனா தடுப்பூசியை வாங்கப் போவது இல்லை என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ அறிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ஆதாரவாளர் ஒருவர் சீனாவின் தடுப்பூசியை வாங்க வேண்டாம் என வலியுறுத்திய பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரேசில் அதிபர், நிச்சயமாக சீனாவின் தடுப்பூசியை வாங்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்