வெனிசுலா நாட்டில் கனமழையின் போது தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலென்சியா நகரில் உள்ள ஆர்ட்டுரோ மைக்கேலினா விமான நிலையத்திலே இவ்விபத்து நடந்துள்ளது.
கொலம்பிய விமான நிறுவனம் LAS Lineas Aereas Suramericanas-ன் லாஸ் கார்கோ 727 சரக்கு விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
சரக்கு விமானம் கொலம்பியாவிலிருந்து வலென்சியாவுக்கு 3 குழு உறுப்பினர்களுடன் பயணம் மேற்கொண்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் பலத்த மழையில் வலென்சியா விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கியது.
இதன் போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி அருகிலிருந்து புல்வெளியில் ஓடி விபத்துக்குள்ளாகி நின்றுள்ளது.
விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானக்குழுவினர் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், விமானம் சேதமடைந்துள்ளதாக கூறினர்.
LAS Cargo 727 veers off the runway on landing at Valencia-Arturo Michelena Airport in Venezuela during heavy rainfall. No injuries reported. pic.twitter.com/yCxQ3U4vKt
— Breaking Aviation News & Videos (@breakingavnews) October 21, 2020