பெரும்பாலும் அழகிகளுடன் ஊர் சுற்றும் மன்னர்... எதிர்க்கத் தொடங்கிவிட்ட மக்கள்: அடுத்து என்ன நடக்கும்?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
250Shares

மன்னர்களை கடவுளாக வணங்கிய தாய்லாந்தில் இன்று மக்கள் மன்னருக்கெதிராக கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.

தாய்லாந்தின் தற்போதைய மன்னரான மஹா வஜிரலோங்கார்னுக்கு (68) பயந்து வெளிநாடுகளுக்கு சென்று அங்கிருந்து ட்விட்டரில் போராட்டம் நடத்துபவர்களும் உண்டு.

அதற்கும் காரணம் உள்ளது, யாராவது மன்னரை விமர்சித்தால் அவர்களை 15 ஆண்டுகள் வரை சிறையில் தள்ள முடியும் என்றொரு சட்டமே இருக்கிறது தாய்லாந்தில்.

மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும் உள்ள பெரும் வேறுபாட்டை தாய்லாந்தை வைத்தே தெளிவாக புரிந்துகொள்ள முடியும். பிரித்தானியாவில் மகாராணியார் இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டை நிர்வகிக்கிறார்கள், அது வேறு மாதிரி... ஆனால், அப்படியே பழங்காலத்தில் மன்னர்கள் எப்படி மக்களை ஆண்டார்களோ, அதேபோல் இன்றும் ஆட்சி செய்கிறார் வஜிரலோங்கார்ன்.

பொறுப்பை மந்திரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, மக்களின் வரிப்பணத்தை மட்டும் வசூலித்து சாப்பிட்டுவிட்டு, எப்போதும் அந்தப்புரத்தில் அழகிகளுடன் செலவிடும் ஒரு பழங்கால மன்னர் போல அவர் இருப்பது, இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு ஒத்துவரவில்லை.

எத்தனை திருமணங்கள்? அழகாக யாரைப் பார்த்தாலும் அவர்களை திருமணம் செய்துகொள்வார் வஜிரலோங்கார்ன், அது தனது அமைச்சரானாலும் சரி, பாதுகாவலரானாலும் சரி, தனக்கு சிகிச்சையளித்த செவிலியரானாலும் சரி. ஒரு படி மேலே போய் சட்டரீதியாக வைப்பாட்டியும் வைத்துக்கொள்வார்.

அரசவையில் மக்கள் எல்லாம் அவரது காலுக்கு கீழேதான் விழுந்து கிடக்கவேண்டும். மந்திரிகள் நாட்டை ஆள, இவர் பெண்களின் உள்ளாடை போல் ஒரு உடையை அணிந்துகொண்டு நாடு நாடாக சுற்றுலா செல்வார், ஜேர்மனிக்கு சென்று ஒரு ஹொட்டலை புக் செய்து அழகிகளுடன் உல்லாசமாக இருப்பார்.

30 பில்லியன் பவுண்டுகள் சொத்து, நான்கு மனைவிகள், அவருடைய செல்ல நாய்தான் விமானப்படை தளபதி... இப்படி ஒரு மன்னரை எவ்வளவு நாள் மக்கள் பொறுத்துக்கொள்வார்கள்? பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, இப்போது தெருக்களில் இறங்கி தைரியமாக போராட ஆரம்பித்துவிட்டார்கள் மக்கள்.

புதிய அரசியல் சாசனம் வேண்டும், மன்னரது உரிமைகள் கட்டுப்படுத்தப்படவேண்டும் என அவர்கள் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்ட நிலையில், வஜிரலோங்கார்ன் தன்னை மாற்றிக்கொண்டாரானால் நல்லது.

இல்லையேல் அவர் மொத்தமாக பதவியை இழக்க நேரிடலாம் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்து!

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்