கொரோனா சிகிச்சைக்காக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த பெண் மாயமான மர்மம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
127Shares

இத்தாலியின் சிசிலி நகரில் ஒரு தாயும் அவரது நான்கு மாதக் குழந்தையும் கொரோனா சிகிச்சைக்காக பொலிசாரால் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்கள்.

குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தாய் மருத்துவமனையிலிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

தாயைக் காணாத மருத்துவர்கள் அவரை தொலைபேசியில் அழைத்தபோது, அவர் பதிலளிக்கவில்லையாம்.

அதனால் அந்த பெண் தன் குழந்தையை கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதிய மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

அந்த பெண் மருத்துவமனைக்கு வரும்போது, தான் அந்த குழந்தையின் அத்தை என்று முதலில் கூறினாராம்.

Credit: Google

இதற்கிடையில், அவர் மாயமான இரண்டு நாட்களுக்குப் பின் மற்றொரு பெண், தான் அந்த குழந்தையின் அத்தை என்று கூறிக்கொண்டு குழந்தையைக் காண வர, சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

பொலிசார் வருவதற்குள் அந்த பெண்ணும் எஸ்கேப் ஆகிவிட்டிருக்கிறார்.

இத்தாலியில் கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 36,832 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறு குழந்தை கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டாள்.

பொலிசார் CCTV கமெரா காட்சிகளின் அடிப்படையில் அந்த பெண்ணை தேடிவருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்