இறந்து பிணவறையில் வைக்கப்பட்ட குறைமாத குழந்தை: சவக்கிடங்கு ஊழியர்கள் கண்ட காட்சி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
3279Shares

வெறும் 23 வாரங்களில் குறைப்பிரசவத்தில் பிறந்து இறந்துவிட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை ஒன்று, ஆறு மணி நேரத்திற்குப்பின் உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 4.29க்கு குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தை ஒன்றை பரிசோதித்த மருத்துவர்கள், அது இறந்துவிட்டதாக சான்றிதழ் அளித்துள்ளனர்.

அந்த குழந்தை சவக்கிடங்கில் உள்ள குளிர்பதனப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இறந்த குழந்தையின் உடலை அதன் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக 10 மணியளவில் சவக்கிடங்கு ஊழியர்கள் அந்த உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்பதனப்பெட்டியை திறந்திருக்கிறார்கள்.

பார்த்தால், அந்த குழந்தை அழுதுகொண்டு இருந்திருக்கிறது. உடனே, குழந்தையின் தந்தைக்கும் மருத்துவர்களுக்கும் தகவலளித்துள்ளார்கள் அந்த ஊழியர்கள்.

மருத்துவர்கள் வந்ததும் அந்த குழந்தை உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அதற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

வெறும் 23 வாரங்களில் பிறந்த அந்த குழந்தை எப்படி அந்த குளிரைத் தாங்கிக்கொண்டு ஆறு மணி நேரம் உயிருடன் இருந்ததோ தெரியவில்லை.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், அந்த குழந்தையிடம் அதன் தந்தை பேசும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளதுதான்.

அவர் அந்த குழந்தையிடம், அப்பா வந்துவிட்டேன் குட்டிப்பையா, விடாதே, தொடர்ந்து போராடு, அப்பாவின் அன்பு உனக்கு எப்போதும் உண்டு.

அவன் அழுகிறான், பாவம் அவன், என் குட்டிப்பையன் போராடுகிறான். கடவுளே, என் குழந்தையுடனேயே இருங்கள், அவன் உயிருடன் இருக்கிறான், அதனால் அவனுடனேயே இருங்கள் என்று மனமுருகி பிரார்த்தனையும் செய்வதை அந்த வீடியோவில் காணலாம்.

அப்புறம் என்ன, மருத்துவமனையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்