இத்தாலியில் பெண் விமானியை மோசமாக துன்புறுத்திய சம்பவத்தில் 8 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இத்தாலியில் உள்ள விமானப்படையில் கியூலியா என்ற பெண் விமானி பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கியூலியா தனது சக ஆண் விமானிகளுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது அவரைத் தூக்கிச் சென்ற ஆண் விமானிகள், கியூலியாவை கடுமையாகத் துன்புறுத்தினர்.
பின்னர் அவரை அருகிலிருந்த நினைவுக் கல்லின் மீது தலையை மோதினர்.
தொடர்ந்து அங்கிருந்த நீச்சல் குளத்தில் கியூலியாவை தூக்கி வீசினர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுகுறித்த புகாரின் பேரில் 8 ஆண் விமானிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.