இக்கட்டான சூழ்நிலையில் பிரபல ஐரோப்பியா நாடு: ஜனாதிபதிக்கு கொரோனா உறுதி! வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்
106Shares

ஐரோப்பிய நாடான போலந்தின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடாவுக்கு கொரோனா உறுதியான செய்தியை அமைச்சர் Blazej Spychalski ட்விட்டரில் உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதிக்கு நேற்று கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

ஜனாதிபதி தற்போது நலமாக இருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கு மருத்துவ சேவைகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளோம் என Blazej Spychalski ட்விட்டரில் அறிவித்தார்.

போலந்தில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதற்கு மத்தியில் ஜனாதிபதிக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

போலந்தில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் 13,600 புதிய வழக்குகள் மற்றும் 153 இறப்புகள் பதிவானது. இதன் மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,172 ஆக அதிகரித்துள்ளது.

இதில் இரண்டு வாரங்கள் உணவகங்கள் மற்றும் மதுக்கடைகள் மூடல் உட்பட சனிக்கிழமை முதல், வைரஸ் பரவுவதைத் கட்டுப்படுத்துவற்கான கூடுதல் கட்டுப்பாடுகள் போலந்தில் நடைமுறைக்கு வர உள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்