சீன தம்பதியின் குழந்தைக்கு வாடகைத் தாயான அமெரிக்க பெண்மணி... கொரோனாவால் ஏற்பட்ட இடையூறு: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
138Shares

சீனத் தம்பதியரின் குழந்தைக்கு வாடகைத் தாயாக இருக்க முன்வந்தார் அமெரிக்கப்பெண்மணி ஒருவர்.

Jennifer Parson (31)ஐப் பொருத்தவரை, அவருக்கு அது ஒரு வேலைதான். அவருக்கு மட்டுமல்ல, வாடகைத் தாயாக இருக்கும் யாருமே குழந்தையைப் பெற்று அதன் பெற்றோரிடம் கொடுத்துவிடவேண்டும், அதன் பின் அந்த குழந்தைக்கும் அவர்களுக்கும் எந்த பிணைப்பும் கிடையாது.

அப்படி எண்ணித்தான், Jennifer அந்த சீன தம்பதியரின் குழந்தைக்கு வாடகைத் தாயாக இருக்க சம்மதித்தார். ஆனால், விதி வேறு திட்டம் வைத்திருந்தது அவருக்குத் தெரியாது.

அரிசோனாவைச் சேர்ந்த Jennifer அந்த குழந்தையைப் பெற்றெடுத்தபோது, அவரால் அந்த குழந்தையை உடனடியாக அதன் பெற்றோரிடம் கொடுக்க முடியவில்லை.

காரணம், கொரோனா பரவல் காரணமாக சீனா ஊரடங்கை அறிவிக்க, விமான பயணங்கள் ரத்தானது. ஏற்கனவே இரண்டு முறை வாடகைத் தாயாக இருந்த அனுபவமுடைய Jenniferக்கு, இது முந்தைய முறைகளைப்போல் இல்லை என்பது புரியவர, அந்த குழந்தையை அதன் பெற்றோர் வரும்வரை தாங்களே வளர்ப்பதென Jenniferம் அவரது கணவரும் முடிவு செய்தார்கள்.

மூன்று மாதங்கள் தங்கள் குழந்தையைப்போலவே அந்த குழந்தையை வளர்த்தாலும், அதன் பெற்றோர் குழந்தையை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காக, அவர்களுடன் ஒன்லைனில் தொடர்பிலிருந்தார்கள் Jenniferம் அவரது கணவரும்.

குழந்தையும் பெற்றோரும் ஒன்லைனில் இணைந்திருப்பதன் மூலம் அவர்களுக்குள் பாசப்பிணைப்பு ஏற்படுவதற்காக அப்படி செய்தாலும், Jenniferக்கும் அந்த குழந்தையிடம் பிணைப்பு ஏற்பட்டதை மறுக்க முடியாது.

கடைசியாக அமெரிக்காவுக்கு வர அனுமதி பெற்று குழந்தையின் பெற்றோர் அமெரிக்கா வந்தார்கள். மூன்று வாரங்கள் Jennifer வீட்டுக்கருகில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கிவிட்டு, மெல்ல குழந்தையை அவரிடமிருந்து பிரித்துக் கொண்டு சென்றார்கள்.

ஏற்கனவே இரண்டு முறை வாடகைத்தாயாக இருந்திருக்கிறார் Jennifer, ஆனால், இம்முறை அந்த சீனக்குழந்தை நாடு திரும்பும் நேரம் வந்தபோது, அவரால் உணர்ச்சி வசப்படாமல் இருக்கமுடியவில்லை.

இனி வாடகைத்தாயாக இருப்பதில்லை என முடிவு செய்துள்ள Jenniferம் அவரது கணவரும், ஒருவேளை அந்த சீனத்தம்பதி மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டால், அவர்களுக்காக மட்டும் இன்னொரு முறை வாடகைத்தாயாக சம்மதம் என்கிறார்கள்.

ஏற்கனவே நெகிழ்ந்துபோயிருந்த Jennifer, அந்த சீனத்தம்பதியிடம், குழந்தைக்கு என்ன பெயர் வைக்க திட்டமிட்டிருக்கிறீர்கள் என்று கேட்க, அவர்கள் சொன்ன பதில், ஜெனிபர்! ஆம், ஒரு வாடகைத்தாயாக மட்டும் இல்லாமல், மூன்று மாதங்கள் சொந்த பிள்ளை போல் தங்கள் குழந்தையை வளர்த்த Jenniferக்கு தாங்கள் பட்ட நன்றிக்கடனை தீர்ப்பதற்காக அந்த சீன தம்பதி Jennifer பெயரையே தங்கள் குழந்தைக்கு வைப்பதென முடிவு செய்துள்ளார்கள்.

ஏற்கனவே நெகிழ்ந்துபோயிருந்த Jennifer, இந்த விடயத்தைக் கேட்டு இன்னும் நெகிழ்ந்துபோய், அவர்கள் நீண்ட காலத்திற்கு எங்கள் தூரத்து உறவினர்களாகவே இருப்பார்கள் என்கிறார் கண்கலங்க!


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்