சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! தொடரும் பயங்கர போரால் கொத்தாக கொல்லப்படும் பாவப்பட்ட மக்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்
821Shares

ஆர்மீனிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அஜர்பைஜான் அதிகாரிப்பூர்வமாக அறிவித்துள்ளது.

செப்டம்பர் 27 ஆம் தேதி நாகோர்னோ-கராபக்கில் ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே இராணுவ மோதல்கள் தொடங்கியது.

இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யா தலைமையில் நடந்த பேச்சுவார்ததையில் ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே இரண்டு போர்நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இருந்தபோதிலும் நாகோர்னோ-கராபக்கில் மோதல்கள் தொடர்கின்றன, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஒப்பந்தங்களை மீறுவதாகவும், விரோதங்களைத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டினர்.

மோதல் தொடங்கியதிலிருந்து நாகோர்னோ-கராபக்கில் பொது மக்கள் 37 பேர் பலியானதாகவும், 118 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி இரு தரப்பிலும் பயங்கர உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அஜர்பைஜான் அதன் வான் பாதுகாப்பு அமைப்பு ஆர்மீனிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அக்டோபர் 24 அன்று குபாட்லி திசையில், அஜர்பைஜான் விமான பாதுகாப்பு ஒரு ஆர்மீனிய இராணுவ விமானத்தை வீழ்த்தியது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட அஜர்பைஜான் அறிவித்ததை மறுத்தத ஆர்மீனிய, இது முழுக்க முழுக்க பொய் என தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்