கலவர பூமியான நகரம்... பொலிஸ் வன்முறையில் கொத்துக் கொத்தாக பலியான அப்பாவி மக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நைஜீரியாவில் பொலிஸ் வன்முறைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 69 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டங்களுக்கு இடையே கொல்லப்பட்டவர்களில் 51 பேர் அப்பாவி பொதுமக்கள் எனவும், 11 பேர் பொலிஸ் அதிகாரிகள் எனவும் 7 பேர் ராணுவத்தினர் எனவும் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரிய ஜனாதிபதி முஹம்மத் புஹாரி வெள்ளிக்கிழமை மாலை இதனைக் கூறினார்.

மேலும், கடந்த இரண்டு வாரங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள் அப்பவி மக்கள் பலருக்கு ஆபத்தானதாக முடிந்துள்ளது என்று முதல் முறையாக அவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால், கொல்லப்பட்ட 51 பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினரே காரணம் என்று ஜனாதிபதி குறிப்பிட மறுத்துள்ளார்.

இருப்பினும், பொலிஸ் அதிகாரிகளும் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லாகோஸ் நகரில் அமைந்துள்ள சுங்கச் சாவடி ஒன்றில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது கலவரமாக மாறவே, பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அடுத்த இரு நாட்களும் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களால் லாகோஸ் நகரம் தடுமாறியது.

பொதுமக்கள் மீது பொலிசாரின் கடும்போக்கு நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்