நடுக்கடலில் திடீரென இரண்டு முறை வெடித்த தீ பற்றி எரிந்த ரஷ்ய டேங்கர் கப்பல்: குழுவினரின் கதி என்ன?

Report Print Basu in ஏனைய நாடுகள்

அசோவ் கடலில் ரஷ்ய டேங்கரில் இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டு கப்பல் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காகசஸ் துறைமுகத்திலிருந்து ரோஸ்டோவ்-ஆன்-டான் நோக்கி சென்று கொண்டிருந்த ரஷ்ய டேங்கர் கப்பல் the General Azi Aslanov-ன் எண்ணெய் பெட்டியில் திடீரென இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டு தீப்பிடித்தது எரிந்தது.

சம்பவம் நடந்த நேரத்தில் டேங்கர் காலியாக இருந்ததாகவும், ஒட்டுமொத்தமாக கப்பலில் 13 பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுவரை பத்து பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என அவசர சேவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மூன்று மீட்புக் கப்பல்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, அங்கு சமீபத்திய தரவுகளின்படி டேங்கர் ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது. காணாமல் போன மூன்று குழு உறுப்பினர்களை மீட்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

கடல் மற்றும் நதி போக்குவரத்து கூட்டாட்சி நிறுவனம் வழங்கிய முதற்கட்ட தகவல்களின்படி, டேங்கரில் பெட்ரோலிய நீராவி வெடித்ததால் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது.

கப்பல் மூழ்கக்கூடும் என்பதை கடல் மற்றும் நதி போக்குவரத்து கூட்டாட்சி நிறுவனம் நிராகரிக்கவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்