பள்ளிக்கு வெளியே தற்கொலை தாக்குதல்: மாணவர்கள் உட்பட 24 பேர் பலி! சடலங்களில் தேடிய பெற்றோர்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் மாணவர்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் காபூலில் உள்ள பள்ளிக்கு வெளியே இக்கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தற்கொலை தாக்குதல்தாரி பள்ளிக்குள் நுழைய முயன்ற போது பாதுகாவலர்கள் அவரை அடையாளம் கண்டுள்ளனர். இதனையடுத்து அவன் வெடிகுண்டை வெடிக்கச் செய்தான் என அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இத்தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பில்லை என தாலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், ஐ.எஸ் அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதல் குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பதறயடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்த சடலங்களில் தேடிய சம்பவம் கலங்க வைத்தது.

இத்தாக்குதலில் காயமடைந்த 12க்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்