எங்கு பார்த்தாலும் இறந்தவர்களின் உடல்கள்: கொரோனா பரவும் நாட்டின் பிணவறையில் எடுக்கப்பட்ட பயங்கரமான வீடியோ காட்சி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் கொரோனா எப்படி மோசமாக பரவி வருகிறது என்பதற்கு ஆதாரமாக விளங்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Novokuznetsk என்ற நகரில் அமைந்துள்ள பிணவறை ஒன்றில் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

பிணவறை ஊழியர் ஒருவர் அந்த வீடியோவை எடுத்துள்ளார். சிறிய இடத்துக்குள் எக்கச்சக்கமாக பிணங்கள் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்டுள்ளதைக் காட்டும் அவர், ’சடலங்கள், சடலங்கள் எங்கு பார்த்தாலும் சடலங்கள், நான் இறந்தவர்களின் தலைகளைத் தாண்டித்தான் செல்லவேண்டியிருக்கிறது’ என்று கூறுமளவுக்கு, அந்த பிணவறை முழுவதும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை ஒரு நாளைக்கு மட்டும் ரஷ்யாவில் 17,347 பேர் புதிதாக கொரோனா கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.

ஆக, மொத்தம் ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1,531,224 ஆகும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்