நிர்வாணமாக இறந்து கிடந்த இளம்பெண்: வெட்டப்பட்ட அவரது விரலை வைத்து மோசமான செயலில் ஈடுபட்ட கொலையாளி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
324Shares

ரஷ்யாவில் பெருவிரல் வெட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக இறந்துகிடந்தார் இளம்பெண் ஒருவர். ரஷ்ய அறிவியலாளரான Ekaterina Antontseva (34)வின் காதலர் வெளிநாடு சென்றுவிட்டு திரும்பியபோது, தன் காதலி கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாரை அழைத்தார்.

பொலிசார் வந்துபார்த்தபோது நிர்வாணமாக இறந்து கிடந்த Ekaterinaவின் பெருவிரல் வெட்டப்பட்டிருந்ததைக் கவனித்தார்கள்.

Ekaterina விரிவுரையாளராகவும், பகுதி நேர மொடலாகவும் பணியாற்றிவந்தார். அவரைக் கொலை செய்ததாக Artyom (36) என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Ekaterinaவைக் கொலை செய்த Artyom, அவரது பெருவிரலை வெட்டி, அதை வைத்து Ekaterinaவின் மொபைல் போனை திறந்து, அவரது துறைத்தலைவருக்கு, தனக்கு உடல் நலமில்லையென்றும், தன்னால் பணிக்கு வர இயலாது என்றும் Ekaterina அனுப்புவது போல குறுஞ்செய்தி அனுப்பியுள்ளான்.

Image: Poltavskiy

அத்துடன் Ekaterinaவுக்கும் தனக்கும் இடையில் பகிரப்பட்ட குறுஞ்செய்திகளையும் அவன் அழித்திருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

Ekaterinaவிடம் Artyom கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவன் Ekaterinaவைக் கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Image: Poltavskiy Denis/P©LTAVSKIY
Image: VK.com
Image: Ekaterina Antontseva

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்