ஓராண்டாக கண்ணில் ஏதோ உறுத்துவதுபோல் உணர்ந்த நபர்: பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
812Shares

சீனாவில் ஓராண்டாக கண்ணில் ஏதோ உறுத்துவது போன்ற உணர்வில் அவதியுற்று வந்துள்ளார் ஒருவர்.

தனது 60 வயதுகளிலிருக்கும் Mr Wan என்ற அந்த நபர், ஒரு கட்டத்தில் உறுத்தல் தாங்க இயலாமல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கண்ணுக்குள் 20 புழுக்கள் இருப்பதைக் கண்டுள்ளனர்.

Mr Wanஇன் கண்ணிலிருந்து 20 உயிருள்ள புழுக்களை அகற்றியுள்ளனர் அவர்கள். வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், மருத்துவர்கள் Mr Wanஇன் கண்ணிலிருந்து புழுக்களை அகற்றி கிண்ணம் ஒன்றில் வைப்பதையும், கிண்ணத்தில் வைக்கப்பட்ட புழுக்கள் உயிருடன் நெளிந்துகொண்டிருப்பதையும் காணலாம்.

'Thelazia callipaeda' என்று அழைக்கப்படும் இவ்வகைப் புழுக்கள் பொதுவாக நாய் அல்லது பூனைகளில்தான் காணப்படும்.

நாய் அல்லது பூனைகளின் கழிவுகள் மீது அமர்ந்த ஈக்கள் மனிதர்கள் மீது அமர்வதன்மூலம் அவை மனிதர்களுக்குப் பரவலாம்.

Mr Wanஐப் பொருத்தவரை, ஏதோ பாதிக்கப்பட்ட பூச்சி ஒன்று அவரை கடித்ததன் மூலம் இந்த புழுக்கள் அவரது கண்ணுக்குள் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்