பிரான்ஸ் போர் விமானங்களை விரட்டியடித்த ரஷ்ய விமானம்! என்ன நடந்தது? அந்தரத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
924Shares

அத்துமீறி தங்கள் நாட்டிற்குள் நுழைய முயன்ற இரண்டு பிரான்ஸ் போர் விமானங்களை விரட்டியடித்ததாக ரஷ்ய தேசிய பாதுகாப்பு நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.

இரண்டு வெளிநாட்டு விமானங்கள் கருங்கடலில் ரஷ்யாவின் எல்லையை நோக்கி நெருங்கி வருவதை கண்டோம்.

அந்த விமானங்களை தடுத்து நிறுத்துவதற்காக ரஷ்ய விமான பாதுகாப்பு படைகள் செவ்வாய்க்கிழமை கருங்கடலில் SU-27 போர் விமானத்தை ஏவின.

அந்த இரண்டு விமானங்களும் பிரான்ஸ் விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 போர் குண்டுவீச்சு விமானம் என ரஷ்ய போர் விமானக் குழுவினர் அடையாளம் கண்டனர்.

பின் ரஷ்ய விமானம், இரண்டு பிரான்ஸ் விமானங்களுடன் கருங்கடலை கடந்து சென்றது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ரஷ்ய போர் விமானம் சர்வதேச விதிகளை கடுமையாக பின்பற்றி நடந்தது என்று ரஷ்ய தேசிய பாதுகாப்பு நிர்வாக மையம் கூறியுள்ளது.

பிரான்ஸ் இராணுவ விமானம் ரஷ்ய எல்லையிலிருந்து விலகிச் சென்றதையடுத்து, SU-27 தெற்கு இராணுவ மாவட்டத்தில் உள்ள ரஷ்ய விமானநிலையத்திற்கு திரும்பியது என ரஷ்ய தேசிய பாதுகாப்பு நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்