ஒரு குழந்தையை விற்று மற்ற குழந்தைகளுக்கு இனிப்பும் உடைகளும் வாங்கிய தாய்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
249Shares

ரஷ்யாவில் வாழும் Chechena (30) என்ற பெண்ணுக்கு மூன்று குழந்தைகள். நான்காவதாக Chechenaவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க, அதை தனக்கு தெரிந்த ஒருவர் மூலம் குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு விற்றுள்ளார் அவர்.

குழந்தையை வாங்கிக்கொண்டு Chechenaவின் வங்கிக்கணக்கில் அந்த தம்பதி 250 பவுண்டுகளை போட, அதை எடுத்து தன் மற்ற குழந்தைகளுக்கு இனிப்பும் உடைகளும் வாங்கியுள்ளார் Chechena.

குழந்தை நல அலுவலர்களுக்கு இப்போதுதான் Chechenaவுக்கு குழந்தை பிறந்தது தெரியும் என்பதால், குழந்தையைக் காணாததும் பொலிசாருக்கு புகாரளித்துள்ளார்கள் அவர்கள்.

Image: Main Directorate of the Ministry of Internal Affairs of Russia for the Krasnoyarsk Territory

விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார் Chechena. தனக்கு தன் குழந்தையை கொடுத்தது பிடிக்கவில்லையென்றும், அந்த தம்பதி தன் குழந்தையை திரும்பக் கொடுத்தால் வாங்கிக்கொள்ளவே தான் விரும்பியதாகவும் தெரிவித்த Chechena, பல முறை அவர்களை தொடர்புகொள்ள முயன்றும் அவர்கள் தொலைபேசியை எடுக்கவேயில்லை என்றும் கூறினார்.

ஆனால், பொலிசார் அந்த தம்பதியை பிடித்துவிட்டார்கள். குழந்தை அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

Chechena மற்றும் குழந்தையை வாங்கிய தம்பதி ஆகிய மூவருக்கும் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Image: Ministry of Internal Affairs

Image: Main Directorate of the Ministry of Internal Affairs of Russia for the Krasnoyarsk Territory

Image: Main Directorate of the Ministry of Internal Affairs of Russia for the Krasnoyarsk Territory

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்