இறுகும் மோதல்! பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானை...பிசாசு போன்று சித்தரித்து பதிவிட்ட பத்திரிக்கை

Report Print Santhan in ஏனைய நாடுகள்
250Shares

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே மேக்ரானை பத்திரிக்கை ஒன்று பிசாசு என்று சித்தரித்து வெளியாகியுள்ள ஓவியம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முகமது நபியின் கார்ட்டூனை வகுப்பறையில் காட்டியதற்காக வரலாற்று ஆசிரியர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாம் மதம் உலகம் முழுவதும் நெருக்கடியில் உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன் தெரிவித்தார். இதனால் உலகில் இருக்கும் இஸ்லாமிய நாடுகள் மேக்ரானின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து, பிரான்சின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ தனது அட்டை படத்தில் துருக்கி ஜனாதிபதியை படுமோசமாக சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்டது.

இதற்கு துருக்கி அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அரசு நடவடிக்கை பாயும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது ஈரானைச் சேர்ந்த தின பத்திரிகை ஒன்று, தனது அட்டைப்படத்தில் இம்மானுவல் மேக்ரானனை பிசாசு போன்று சித்தரித்து, (Le démon de Paris) என தலைப்பிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 27 ஆம் திகதி வெளியான ஈரானின் Vatan Emrooz பத்திரிகையிலேயே இந்த ஓவியம் வெளியாகியுள்ளது. தற்போது இது வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்