தைவானில் போர் விமானம் ஒன்று நடுவானில் கோளாறாகி கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
F-5E போர் விமானம் வியாழக்கிழமை காலை கிழக்கு தைவானில் உள்ள ஒரு விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டது.
புறப்பட்ட இரண்டு நிமிடத்தில் நடுவானில் விமானத்தின் இன்ஜின் செயலிழந்ததால் கீழே விழுந்து நொறுங்கியது.
சூ என்ற குடும்பப்பெயர் கொண்ட 29 வயதான விமானி, அவசரநிலை குறித்து தகவல் அளித்த பின்னர் விமானத்திலிருந்து பத்திரமாக பாராசூட் மூலம் வெளியேறினார்.
எனினும் பலத்த காற்று மற்றும் மோசமான வானிலையால் பாராசூட்டுடன் சூ கடலில் மூழ்கினார்.
ஹெலிகாப்டர் உதவியுடன் சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் விமானி சூ-வை கண்டுபிடித்து, அவசர சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், காலை 9:27 மணிக்கு, சூ இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. விமானம் விபத்துக்குள்ளானதை குறித்து விசாரிக்க விமான உற்பத்தியாளரான ஏ.ஐ.டி.சி ஒரு சிறப்பு பணிக்குழுவை அனுப்பியுள்ளது.