வடகொரிய அதிபருடன் புதிதாக தென்படும் பெண்... மனைவியையும் தங்கையையும் காணாததால் நிலவும் மர்மம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அதிகாரப்பூர்வ பயணங்களில் புதிதாக அவருடன்ஒரு பெண் தென்படும் விடயம் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண்ணின் பெயர் Hyon Song-wol (43), அவர் கிம்மின் முன்னாள் காதலி. Hyon ஒரு பிரபல பாப் பாடகியாவார்.

முன்பெல்லாம் கிம்முடன் அவரது தங்கையான Kim Yo-jongதான் அதிகாரப்பூர்வ பயணங்களில் கூட இருப்பார்.

ஆனால், இப்போது அவரைக் காணாததால், Hyon அவரது இடத்தைத் தட்டிப் பறித்துக்கொண்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற சில அரசு நிகழ்ச்சி ஒன்றில், அரசு விருந்தினர்களை அழைத்துச் சென்று இருக்கைகளில் அமரவைப்பது, அவர்கள் கிம்முக்கு கொடுக்கும் மலர்களை வாங்கிக்கொள்வது போன்ற பணிகளை Hyon செய்ததைக் காணமுடிந்ததாகவும், முன்பு இந்த பணியை கிம்மின் தங்கை செய்துவந்ததாகவும், இந்த நிகழ்ச்சியில் அவர் சற்று தள்ளி பேசாமல் அமர்ந்திருந்ததாகவும் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கிம் ஜான் உன்னுக்குப் பின் அவரது தங்கைதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் ஒதுக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நீண்ட நாட்களாக கிம்மின் மனைவியையும் பொது நிகழ்ச்சிகளில் காண இயலாததால் சந்தேகம் நிலவிவந்த நிலையில், அவர் தற்போது கர்ப்பமாக இருக்கலாம் என்ற கருத்து நிலவிவருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்