திடீரென மாயமான இளம்பெண்... அழுகிய நிலையில் கண்டெடுக்கபட்ட உடல்: விசாரணையில் தெரியவந்த உண்மை

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
141Shares

ஹங்கேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சேனல் தீவுகளில் பணியாற்றிவந்தபோது ஒரு நாள் திடீரென மாயமானார்.

பல நாட்களுக்குப்பிறகு அவரது உடல் அழுகிய நிலையில் கரையொதுங்கியதுடன் அவரது காரும் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார், சேனல் தீவுகளைச் சேர்ந்த Jamie Lee Warn (56) என்பவரைக் கைது செய்தனர்.

ஆனால், தனக்கும் அந்த கொலைக்கும் தொடர்பில்லை என்றே கூறிவந்தார் Warn. அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையிலும், மேல் முறையீட்டு நீதிமன்றம், அவர் மீதான விசாரணை நியாயமற்றது என்று கூறிவிட்டது.

என்றாலும் மனம் தளராத பொலிசார், தொடர்ந்து பல ஆதாரங்களை திரட்டினர். அவற்றின்படி, ஏற்கனவே திருமணமான Warn, தன்னுடன் பணிபுரிந்த Zsuzsanna Besenyei (37) என்ற பெண்ணுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. Zsuzsanna தனது செலவுக்காக அடிக்கடி Warnஇடம் பணம் கேட்டு வந்துள்ளார்.

அவர் கொலை செய்யப்படுவதற்கு முன், தனக்கு முடி வெட்டுவதற்காக பணம் வேண்டும் என்று Warnஇடம் கேட்டு அவருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து இருவரும் கோபமாக செய்திகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். கடைசியாக, சரி, வீட்டுக்கு வா, பணம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார் Warn. அவரை சந்தித்தபின் Zsuzsanna மாயமாகிவிட்டார்.

தன் பின் அவரது உடல் அழுகிய நிலையில் கடற்கரையில் ஒதுங்கியதுடன், அவரது காரும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Zsuzsannaவை கொலை செய்த Warn, பல நாட்கள் அவரது உடலை காரின் பின் பக்கத்தில் பொருட்கள் வைக்கும் இடத்தில் மறைத்துவைத்துவிட்டு, பின்னர் அவரது காரைக் கொண்டு கடற்கரையில் நிறுத்திவிட்டு, அவரது உடலையும் கடலில் வீசி வந்திருக்கிறார்.

அவர் வேண்டுமென்றே தடயங்களை அழிப்பதற்காகத்தான் அப்படி செய்தார் என பொலிசார் குற்றம் சாட்டுகிறார்கள்.

அதேபோல், அவரது உடல் பயங்கரமாக அழுகியிருந்ததாலும், கார் வெகு நாட்கள் தண்ணீருக்கருகில் நிறுத்தப்பட்டிருந்ததாலும், தடயவியல் நிபுணர்களால் எந்த தடயத்தையும் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொலிசார் Warn மீது குற்றம் சாட்ட, அவர் மறுக்க வழக்கு தொடர்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்