நைஸ் தாக்குதலை தொடர்ந்து சவுதியில் பிரான்ஸ் தூதரகத்தில் தாக்குதல்: ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுறுத்தல்

Report Print Basu in ஏனைய நாடுகள்
155Shares

சவுதி அரேபியவில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபிய நகரமான ஜெட்டாவில் பிரான்ஸ் தூதரகத்திலே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நகரமான நைஸில் உள்ள தேவலாயத்தில் தாக்குதல் நடந்த பின்னரே சவுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காவலரைக் குத்திய நபரை பொலிசார் கைது செய்யததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி அந்த நபர் காவரைக் குத்தியதாக கூறப்படுகிறது.

இத்தாக்குதலில் காவலர் காயத்துடன் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாக்குதலை தொடர்ந்து அதிகாரிகள் ஜாக்கிரதையாக மற்றும் பாதுகாப்புடன் இருக்குமாறு பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்லாமிய மதத்தில் தடைசெய்யப்பட்டுள்ள முகமது நபி அவர்களின் கார்ட்டூன்களை வரைவதும் பிரான்சின் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையில் அடங்கும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வலியுறுத்தியதை அடுத்து சில முஸ்லீம் தலைவர்கள் பிரான்ஸ் தயாரிப்புகளை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்