மனைவியை வேறொரு நபர்களுக்கு 5000 ரூபாய்க்கு விற்ற கணவன்! அதன் பின் 21 நாட்கள் கழித்து அப்பெண்ணுக்கு நடந்த கொடூரம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
3757Shares

பாகிஸ்தானியில் சொந்த மனைவியை பணத்திற்காக கணவன் விற்ற நிலையில், அப்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியன் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தொலைவில், பஞ்சாப் மாகாணத்தில் வடக்கு சர்கோதா என்ற பகுதி உள்ளது.

இங்கு வைத்து, அந்நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவியை 4 பேருக்கு 5000 ரூபாய்க்கு விற்றுள்ளார்.

அதன் பின் 21 நாட்கள் கழித்து, விற்கப்பட்ட அந்த பெண்ணை, நான்கு பேர் கொண்ட கும்பல், கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

அவர்களிடம் சிக்கித் தவித்து வந்த பெண், ஒரு வழியாக தப்பி காவல்நிலையத்தில் வந்து புகார் கொடுக்க, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்த பெண் கொடுத்த புகார் பொலிசார் ஏற்க மறுத்ததால், தன் கணவன் மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேர்களுக்கு எதிராக அப்பெண், சர்கோதா செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வரும் 2-ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்