பிரான்ஸ் தேவாலயத்தில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் குறித்து மலேசிய முன்னாள் பிரதமர் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
380Shares

பிரான்ஸின் நைஸ் நகரில் தேவாலயம் ஒன்றில் நுழைந்து துனிசிய அகதி ஒருவர் நடத்திய வெறியாட்டத்தில் மூவர் கொடூரமாக கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ள நிலையில், மலேசியாவின் முன்னாள் பிரதமரான Mahathir Mohamad (95), நடந்த சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட கருத்து ட்விட்டர் விதிகளை மீறியதால் அகற்றப்பட்டுள்ளது.

அப்படி Mahathir Mohamad வெளியிட்ட கருத்துக்கள்... மதம் என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாவிட்டாலும், கோபக்காரர்கள் கொலை செய்யத்தான் செய்வார்கள், பிரான்ஸ் நாட்டு மக்கள் தங்கள் வரலாற்றில் பல மில்லியன் மக்களை கொலை செய்துள்ளார்கள், அவற்றில் பலர் இஸ்லாமியர்கள். இது முதல் ட்வீட் இஸ்லாமியர்களுக்கு, கோபம்கொள்ளவும், கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்காக பல மில்லியன் பிரான்ஸ் நாட்டவர்களைக் கொல்லவும் உரிமை உள்ளது.

இது இரண்டாவது ட்வீட். இதைத்தான் ட்விட்டர் பின்னர் நீக்கிவிட்டது. பெரும்பாலான இஸ்லாமியர்கள் ’ உன் கண்னை ஒருவன் காயப்படுத்தினால், நீ அவனது கண்னை காயப்படுத்தவேண்டும் என்ற பழி வாங்கும் விதியை பயன்படுத்துவதில்லை, இஸ்லாமியர்கள் அப்படி செய்வதில்லை, ஆகவே, பிரான்ஸ் நாட்டவர்களும் அப்படி செய்யக்கூடாது, அதற்கு பதிலாக மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க அவர்கள் தங்கள் மக்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். இது மூன்றாவது ட்வீட்.

மலேசிய முன்னாள் பிரதமர் Mahathirஇன் இந்த கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், மலேசிய பிரதமரின் கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரான்ஸ் டிஜிட்டல் துறை அமைச்சரான Cédric O, ட்விட்டர், மலேசிய பிரதமர் Mahathirஐயே ட்விட்டரிலிருந்து உடனடியாக தடை செய்யவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்