கருணைக்கொலைக்கு ஆதரவளிக்கும் நியூசிலாந்து மக்கள்! விரைவில் நிறைவேற இருக்கும் சட்டம்

Report Print Karthi in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக மாற்றிட தற்போது வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.

நியூசிலாந்தர்கள் எண்ட் ஆஃப் லைஃப் சாய்ஸ் மசோதா முனைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வளிக்க உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தீராத நோய்களால் அவதிப்படுவோர்களை கருணைக்கொலை செய்திட இந்த மசோதா வழிவகுகின்றனது.

இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு தற்போது நாடு முழுவதும் நடந்து வருகின்றது. இந்நிலையில் இதுவரை பதிவான வாக்குகளில் 65.2 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் கருணைக்கொலைக்கு அனுமதிக்கும் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனாலும், கிட்டத்தட்ட அரை மில்லியன் வாக்குகள் இன்னும் எண்ணி முடிக்கப்படவில்லை. இதன் இறுதி முடிவுகள் நவம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இறுதி வாக்கெடுப்பு இந்த மசோதாவை நிறைவேற்றினால் கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்கிய நெதர்லாந்து மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்தும் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 2021 க்குள் நடைமுறைப்படுத்தப்படும் இந்த சட்டம், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் ஏராளமான பாதுகாப்புகளை உள்ளடக்கியது என்றும் கூறப்படுகின்றது.

சமீபத்திய தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், இந்த மசோதாவையும், பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது குறித்த வாக்கெடுப்பையும் ஆதரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்