பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்! கைது செய்ய முயன்ற பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திய சிறுவன் சுட்டுக்கொலை: வெளியான புகைப்படம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
87Shares

ரஷ்யாவில் அதிகாரி ஒருவரை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரஷ்யாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட Tatarstanm பிராந்தியத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

16 வயது சிறுவன் Kukmorsky நகரில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளான்.

வளாகத்திற்குள் கண்ணாடி துண்டுகள் சிதறி தீப்பற்றி எரிவதை பொலிசார் அதிகாரி ஒருவர் கண்டுள்ளார். பிறகு மீண்டும் வளாகத்திற்கு வெளியிலிருந்து மர்ம நபர் ஒருவன் பெட்ரோல் குண்டு வீசுவதை பார்த்துள்ளார்.

பின்னர் அவனை விரட்டிச் சென்ற பிடிக்க முயன்ற போது 16 வயது சிறுவன் மூன்று முறை அதிகாரியை ஒருவரை கத்தியால் குத்தியுள்ளான்.

இதனையடுத்து மற்றொரு பொலிஸ் அதிகாரி சிறுவனை எச்சரிக்க வானத்தை நோக்கி சுட்டுள்ளார்.

இதற்கு பின்னரும் சிறுவன் அடங்க மறுத்ததால் பொலிஸ் அதிகாரி அவனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். மருத்துவர்கள் வருவதற்கு முன்பே சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவத்தை தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்ற செயலாக கருதி குற்றவியல் வழக்கு பதிவு செய்து விசாரணை முன்னெடுத்துள்ளதாக பெரிய குற்றங்களைக் கையாளும் ரஷ்யாவின் புலனாய்வுக் குழு கூறியுள்ளது.

எதற்காக சிறுவன் இத்ததைய தாக்குதலில் ஈடுபட்டான் என்பதற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்