நிலநடுக்கத்தால் இடுபாடிகளுக்குள் சிக்கிய உரிமையாளர்! உதவி கேட்டு கத்தும் நாய்: கண்கலங்க வைக்கும் புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
981Shares

நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் நபரின் அருகில் நாய் ஒன்று நின்று உதவி கேட்பது போன்று இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது.

துருக்கியின் மேற்கு இஸ்மிர் மாகாணத்தின் கரையிலிருந்து சுமார் 17 கி.மீற்றர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் துருக்கி நகரமான இஸ்தான்புல் வரை உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.

கிரீஸ் தீவான கிரீட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும், உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று அதிகவேகமாப பகிரப்பட்டு வருகிறது. அதில் நிலநடுக்கத்தால் தரைமட்டாகியிருக்கும் இடிபாடுகளுக்கிடையே நாய் ஒன்று உரிமையாளரை தேடுவது போன்றும், அதன் பின் உரிமையாளரின் கையை பார்த்து அது உதவி கேட்பது போன்றும் உள்ளது.

இது இப்போது நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து போயிருக்கும் துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தில் நடந்ததா? அல்லது வேறு பகுதியில் நடந்தது இப்போது பகிரப்பட்டு வருகிறதா என்பது தெரியவில்லை.

ஆனால், இந்த புகைப்படத்தை பார்க்கும் போது, சற்று கண்கலங்க வைக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்