பிரேசிலில் ஆற்றை கடந்து செல்லும் 50 அடி நீளம் கொண்ட அனகோண்டா பாம்பு? வைரலாகும் வீடியோவின் உண்மை

Report Print Santhan in ஏனைய நாடுகள்
4121Shares

50 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று ஆற்றை கடந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மை என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது பொழுதுபோக்காக இருப்பது சமூகவலைத்தளங்கள் தான், இதில் வரும் வீடியோக்கள் மக்களின் அதிகம் கவனம் பெறுகின்றன.

குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் டுவிட்டர், பேஸ்புக், யூ டியூப் மற்றும் சில ஆப்கள் மக்களின் பொழுதுபோக்காக இருந்தது.

இந்நிலையில், நேற்று டுவிட்டரில் வீடியோ ஒன்று டிரண்டில் இருந்து வருகிறது. அதில், ஆற்றை கடக்கும் 50 அடி நீளம் கொண்ட அனகோண்டா பாம்பு ஒன்று என்று பதிவிட்டிருந்தனர்.

அந்த வீடியோ லட்சக்கணக்கில் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இது, பிரேசிலின் க்ஸிங்கு ஆற்றில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்பட்டது.

ஆனால், இது உண்மை இல்லை, யாரோ ஒருவர் குறித்த வீடியோவை பதிவிறக்கம் செய்து, அதன் பின் எடிட் செய்து, 50 அடி நீளம் கொண்ட அனகோண்டா என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அது உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்