தலைநகரில் மழை போல் பொழிந்த ராக்கெட்டுகள்! பீதியில் தெறித்த ஓடிய மக்கள்: கமெராவில் சிக்கிய திகிலூட்டும் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்
661Shares

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சரமாரி ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காபூல் நகரின் பல பகுதியில் சுமார் 10 ராக்கெட்டுகள் தாக்கியதாக கூறப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி காலை 8:45 மணிக்கு தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. காயமடைந்தவர்களை அருகிலிருந்த மக்களே மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

நடத்தப்பட்டது ராக்கெட் தாக்குதல் என பொலிசார் உறுதி செய்துள்ள நிலையில், எங்கிருந்து ஏவப்பட்டது உட்பட மேலதிக தகவல்கள் ஏதும் வழங்கவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்